இதையடுத்து ஜெய்கோபால் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று கைது செய்யப்பட்ட ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு வந்தது. அப்போது பேனர் வைத்ததற்கும் ,எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை , எங்களின் கட்சிகாரர்கள் தான் பேனர் வைத்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

