Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா..!! ….. அசுரனா ? இது ….. சென்னையில் அசுரத்தனமான வசூல் …!!

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பூமணி எழுதிய ”வெக்கை” என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார் மற்றும் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார். மேலும் தனுஷ் நடித்த பொல்லாதவன் , ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுசின் இந்த படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

தனுஷ் நடித்த அசுரன்திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைப்படங்களில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் முக்கிய இடம் பெற்றுள்ளது. சாதிய கொடுமையால் ஒரு குடும்பம் அனுபவித்த வேதனைகளை உயிரோட்டமாக காண்பித்த அசுரன் திரைப்படம் ஒரு விவசாயம் சார்ந்த பாடமாகவும் ,  நிலத்தைச் சார்ந்த படமாக அமைந்துள்ளது. நடிகர் தனுஷ் எப்பவுமே ஒரு அழுக்கு பையன் , பக்கத்து வீட்டு பையன் , ரவுடி பையன் அது மாறிதான் நடித்து வந்தார். ஆனா இந்தப்படத்துல நடிகர்கள் தனுஷ் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் மேலும் டி.ஜே , என் கருணாஸ் அம்மு , அபிராமி , பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்காங்க. நடிகர் தனுஷ் நடித்த இந்த அசுரன் திரைப்படத்தின் பஸ்ட் லூக் , மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது.  நடிகர் தனுஷ் நடித்த இந்த அசுரன் திரைப்படம் கடந்த 9ம் தேதி மட்டும் சென்னையில ரூபாய் 27 லட்சம் வசூல் செய்திருக்கும். அதுமட்டுமில்ல இதுவரை மொத்தம் வசூல் என்று பார்த்தால் சென்னையில் மட்டும் இந்தப் படம் ரூபாய் 3.9 கோடி வசூல் செய்துள்ளது. எனவே நடிகர் தனுஷ் நடித்த இந்த திரைப்படம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது என்று தான் சொல்லணும். அது மட்டுமில்லாம இந்த படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 27 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

Categories

Tech |