நடிகர் தனஞ்சயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் பஹத் பாஸில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
Happy Birthday to the Man of Many Talents @Dhananjayaka garu 🎉
Meet Our 'Jolly Reddy' From #PushpaTheRise 🔥#IntroducingJollyReddy#ThaggedheLe 🤙@alluarjun @iamRashmika #FahadhFaasil @aryasukku @ThisIsDSP @resulp @adityamusic @PushpaMovie pic.twitter.com/VxPCw4Hq3J
— Mythri Movie Makers (@MythriOfficial) August 23, 2021
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தனஞ்சயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.