தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் புது படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் என்ற தமிழ் படம் மட்டுமே வெளியிடப்பட்டது. மேலும் நேற்று குறைவான அளவிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே நேற்று ரிலீஸ் செய்யப் பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் ரிலீசுக்கு காத்திருக்கும் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது இயல்பு நிலை திரும்பும் என்று திரைத்துறையினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.