Categories
உலக செய்திகள்

‘உறுதித்தன்மையை கூற வேண்டும்’…. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்…. வெள்ளைமாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு….!!

வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் தலீபான்கள் குறித்து பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேறினர். இதனால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பல்வேறு உலக நாடுகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் “ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியது சரியான முடிவு என்று வருங்காலத்தில் தெரியவரும். மேலும் ஆப்கானில் அமைதி நிலவ வேண்டுமென்றால் தலீபான்கள் தங்களின் முடிவை உறுதியாக கூற வேண்டும். அவர்கள் அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய நல்லாட்சியை மக்களுக்கு கொடுப்பார்களா என்று கூற வேண்டும். ஆனால் இதுவரை அது போன்ற எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. அப்படி அனைத்தையும் உள்ளடக்கிய ஆட்சியை ஆள விரும்பினால் அவர்களுக்கு கூடுதல் உதவி தேவைப்படும். அதாவது பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ரீதியாக பல தரப்பிலிருந்தும் உதவிகள் தேவைப்படும்.

குறிப்பாக தலீபான்களை சட்டபூர்வமாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கு முதலில் அவர்களின் உறுதித்தன்மையை காண வேண்டும். இதுவரை தலீபான்கள் அமெரிக்கப் படையின் மீது எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் அனைவரும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. அவர்கள் இன்னும் சிறு சிறு குழுக்களாகவே இயங்குகின்றனர். அதனால் தான் இது தொடர்ந்து நீடிக்கின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |