பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகரின் புது முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சேனலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
குடும்ப பாசம் அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை அடக்கிய இந்த சீரியலில் மூர்த்தி, தனம், முல்லை, கதிர், மீனா ஆகிய கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரனின் நடிப்பிற்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
மேலும் நடிகர் குமரன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குமரனின் இந்த புது முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/tv/CSq2inTB2BK/?utm_source=ig_embed&ig_rid=ea1a66ad-be0a-4327-be0e-64320674d76e