சட்ட விரோதமாக சாராயத்தை பதுக்கி வீட்டில் வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூட்டை கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் அவரின் வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் சேகரை கைது செய்து அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மற்றொரு பகுதியில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அய்யப்பன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.