இந்த ஆண்டு ஹேஸ்டேக்கில் #valimai நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது..
தமிழ்நாட்டில் நடிகர் அஜீத் மற்றும் விஜய் இருவருமே சரிக்கு சமமாக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் படம் மற்றும் படம் குறித்த எந்த தகவல்கள் வந்தாலும் அதனை சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டாக்கி சண்டை போடுவார்கள்.. இதுவே ரசிகர்களது வழக்கமாக இருந்து வருகிறது.. ட்விட்டரில் அடிக்கடி விஜய் மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி ஹேஸ்டேக்கில் முதலிடம் பிடித்து வருகின்றனர்..
இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் ஜனவரி 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அதிகம் பகிரப்பட்ட ஹேஸ்டேக் ஆக “வலிமை” முதலிடம் பிடித்துள்ளது.. டுவிட்டரில் மாஸ்டர் ஹேஸ்டேக் 2ஆவது இடமும், அஜித் குமார் என்ற ஹேஸ்டேக் 4ஆவது இடமும் பிடித்துள்ளது. இந்த தகவலை ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..
https://twitter.com/TwitterIndia/status/1429669135030439939