சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்ட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை செயலாளர் மலைராஜன், ஆட்டோ சங்க தலைவர் மாரிந்திரன், ஆட்டோ சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், காப்பீட்டு கழக ஊழியர், சங்க கிளை செயலாளர் முத்துபாண்டி, பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.