2 ஜீப்கள் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உட்பட 4 பேருக்கு பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள மாநிலம் சூரியநெல்லி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறிகளை ஏற்றி செல்ல தேனி மாவட்டம் போடிக்கு காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை ஏற்றி கொண்டு மீண்டும் கேரளாவிற்கு திரும்பியுள்ளார். அப்போது புளியூத்து மேல்மலை சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிரே கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்களை ஏற்றி கொண்டு மற்றொரு ஜீப் வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக 2 ஜீப்களும் ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது.
இந்த விபத்தில் தம்பிதுரை மற்றும் மற்றொரு ஜீப்பில் இருந்த 3 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தம்பிதுரை அளித்த புகாரின் அடிப்படையில் போடி குரங்கணி காவல்துறையினர் மற்றொரு ஜீப்பை ஓட்டி வந்த ராஜாராம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.