எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று எவர்கிரீன் சரக்கு கப்பல் வெற்றிகரமாக பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதத்தில், ஜப்பான் நிறுவனத்திற்குரிய எவர்கிரீன் என்ற மிகப்பெரிதான சரக்கு கப்பல் பயணித்தது. அப்போது, கால்வாயின் இடையே திரும்பி தரை தட்டி நின்றுவிட்டது. இதனால், சூயஸ் கால்வாயின், போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் அதிகமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
அதன் பின்பு, ஆறு நாட்களாக தீவிரமாக போராடி கப்பலை மிதக்க வைத்தனர். இதனையடுத்து மீண்டும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும் கப்பல் மாட்டிக் கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழி போக்குவரத்து தடையானதில் உண்டான இழப்பு போன்றவற்றை தந்தால் தான் கப்பல் இங்கிருந்து நகரும் என்று எகிப்தின் அதிகாரிகள் எவர்கிரீன் கப்பலை பறிமுதல் செய்தார்கள்.
அதன் பின்பு, நீதிமன்றத்திற்குச் சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. எனவே எவர்கிரீன் கப்பல் பயணிக்க தொடங்கியது. தற்போது, பல மாதங்கள் கடந்த நிலையில், எவர்கிரீன் கப்பல், சூயஸ் கால்வாயின் வழியே நேற்று பயணித்திருக்கிறது. இந்த தடவை கப்பல் எதிலும் மாட்டாமல், சுயஸ் கால்வாயை கடந்து விட்டது என்று எகிப்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.