கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த பணியளர்களின் பிஎப் பங்களிப்பு தொகையை அடுத்த 2022 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இபிஎப்ஓ-வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களின் PF பங்களிப்பும், தொழில் நிறுவனங்களின் பங்களிப்பையும் சேர்த்து மத்திய அரசு செலுத்தும்.
தொழிலாளர்கள் மீண்டும் தங்களுடைய பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும். வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களில் வேறு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் 16 வகையான தொழில் திட்டங்களை மூலம் அவர்கள் வேலை வாய்ப்பை பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.