அமெரிக்கா வீரர்களை தலீபான்கள் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இவர்களுக்கு அஞ்சி அங்குள்ள பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பேட்டி ஒன்றை செய்தியாளர்களிடம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து தலீபான்களால் பாதிக்கப்படையக் கூடிய பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா வீரர்களை தலீபான்கள் தாக்கினால் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும். மேலும் அமெரிக்கா வீரர்கள் மீது தலீபான்கள் வன்முறை தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களின் பணிக்கு ஊறு விளைவித்தாலோ அதற்கும் சரியான பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.