Categories
உலக செய்திகள்

காபூல் விமானநிலையத்தில் இராணுவத்தினரின் நெகிழ்ச்சி செயல்.. வைரலாகும் வீடியோ..!!

காபூல் விமான நிலையத்தில் தாயை விட்டு பிரிந்த பச்சிளம் குழந்தை ஒன்றை துருக்கி இராணுவ வீராங்கனை அன்புடன் முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி, தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. மேலும் சில பெற்றோர்கள் தங்களால் செல்ல முடியாவிட்டாலும், தங்கள் குழந்தைகளாவது வெளிநாட்டில் சுதந்திரமாக வாழட்டும் என்று கருதி விமான நிலையத்தில் உள்ள ராணுவ வீரர்களிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்து விடுகிறார்கள்.

அந்த குழந்தைகளை, வெளிநாட்டில் இருக்கும் தத்தெடுக்கும் நிறுவனங்களிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 மாத பச்சிளம் குழந்தை காபூல் விமான நிலையத்தில், எப்படியோ தாயிடமிருந்து பிரிந்து தனியாக கிடந்துள்ளது. அந்த  குழந்தையை, துருக்கி இராணுவவீரர்கள் மீட்டு அன்புடன் அரவணைத்து கவனித்திருக்கிறார்கள்.

https://twitter.com/MuslimShirzad/status/1429013556352143360

மேலும், அவர்கள் அந்த குழந்தைக்கு உணவு கொடுத்து பாதுகாத்து வந்தனர். அதன் பின்பு குழந்தையின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டனர். எனவே, குழந்தையின் தந்தையிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டார்கள். எனினும் துருக்கி பெண் ராணுவ வீராங்கனை, தன் குழந்தை போன்று அன்புடன் அரவணைத்து முத்தமிட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது, அந்த குழந்தையின் பெயர் Farista Rahmani என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |