Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய வீரரை …. தட்டித் தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணியில்  இடம்பெற்றுள்ளார் .

14-வது ஐபிஎல் சீசன் தொடரில் இதுவரை 29 லீக்  போட்டிகள் நடைபெற்றுள்ளது .இந்நிலையில்  மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை  நடைபெறுகிறது . இதற்கான அட்டவணை  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக  சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் அமீரகம் சென்றுள்ள  நிலையில்,மற்ற அணிகளும் போட்டிக்காக தயாராகி வருகின்றன .இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த  ரிச்சர்ட்சன், மெரிடித் ஆகிய இருவரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர் .

இதனால் அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான நாதன் எல்லிசை பஞ்சாப் கிங்ஸ் அணி  ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் நாதன் எல்லிசை எந்தஒரு  அணியும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது அவரை 3 அணிகள் முயற்சி செய்தனர் . ஆனால் கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தான் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. 26 வயதான நாதன் எல்லிஸ்  சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மூன்று பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அத்துடன் தற்போது நடைபெற உள்ள டி 20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மூன்று பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார் .இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் , இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |