Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை…. ஸ்ருதிஹாசனின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கடந்த சில நாட்களாக Santanu Hazarika என்பவருடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட பலரும் இவரை தான் நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலை தளங்களில் செய்தி பரவி வந்தது.

ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் இது குறித்த எந்த ஒரு தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் திருமணத்தை பற்றி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர் நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். ஸ்ருதி ஹாசனின் இந்த பதிலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |