இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். கடந்த 6 ஆம் தேதி மணிரத்னத்தின் ’நவரசா’ ஆந்தாலஜி படம் வெளியான நிலையில், தற்போது ‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஆறு கதைகளில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்கள்.