Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 7 3/4 லட்சம்…. மர்ம நபர்கள் கைவரிசை…. வலை வீசி தேடும் போலீஸ்….!!

கல்லூரி அலுவலகத்தில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஜி.ஓ நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தி வருகிறார். இந்நிலையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்த பீரோவில் 20 பவுன் தங்க நகை மற்றும் 1,80,000 ரொக்கப் பணம் வைத்திருந்திருக்கிறார். அதன்பின் ஊழியர்கள் வழக்கம் போல் கல்லூரியை பூட்டி விட்டு சென்றுள்ளனர். அப்போது கல்லூரி வளாக சுவரின் மேல் ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் வைத்திருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த‌ ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதில் கல்லூரியில் வைத்திருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து பீரோவின் கீழ்ப்பகுதியில் உள்ள ரகசிய அறையில் வைத்திருந்த 1,50,000 மர்ம நபர்களிடமிருந்து தப்பித்துள்ளது. பின்னர் காலை நேரத்தில் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலுவலக அறையில் சோதனை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் தடயங்களை கண்டறிவதற்காக போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அதன் மூலமாக கொள்ளை நடந்த அலுவலக அறையில் மோப்பம் பிடித்து விழுப்புரம் பிரதான சாலை வரை ஓடி சென்று நின்றுள்ளது. இதில் அந்த மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிகாத காரணத்தினால்  கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் தடையங்களை கண்டுபிடித்து பதிவு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7  3/4 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |