Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம்…. உறுதி செய்யப்பட்டது….!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பண மோசடி, ஆபாசபேச்சு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்த நிலையில் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிவுரைகழகம் உறுதிசெய்துள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் அளவுக்கு தான் எவ்வித தவறும் செய்யவில்லை என்ற பப்ஜி மதனின் விவாதத்தை அறிவுரைகழகம் நிராகரித்தது.

Categories

Tech |