Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் வெள்ளத்தில் மாட்டிய லேடி சூப்பர் ஸ்டார்… வைரலாகும் வீடியோ…!!!

நயன்தாரா படப்பிடிப்புக்காக செல்லும் போது அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் நடிகை நயன்தாரா படப்பிடிப்புக்காக செல்லும் போது அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாராவை அவரது பாதுகாவலர்கள் பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பாண்டிச்சேரி படப்பிடிப்புடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |