சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள தேவிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் அவரது மனைவி ராஜம்மாள் (எ) பாப்பாத்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சுதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுதா அவரது தாய் மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் பரமத்திவேலூர் சென்று கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து பரமத்திவேலூர் ஊருக்குள் செல்வதற்காக மரவாபளையம் நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சாலையில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது நாமக்கலில் இருந்து கரூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் மீது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியுள்ளது. இதில் கட்டுபாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சுதாவின் மொபட் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாப்பாத்தி பலத்த காயமடைந்த நிலையில் சுதா மற்றும் 2 குழந்தைகள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பாப்பாத்தியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்ட வசமாக பாப்பாத்தி செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.