Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

துரத்தி சென்று தாக்கிய விலங்கு…. உடல் நசுங்கி பலியான தொழிலாளி…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் அறையட்டி பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது லட்சுமணனை காட்டு யானை துரத்தி சென்று தாக்கியுள்ளது.

இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |