Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்-1 முதல்…. பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று அமைசர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் மதுரையை தொடர்ந்து திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |