Categories
உலக செய்திகள்

புதிய விதியை கொண்டுவந்த தலிபான்கள்…. விரட்டியடிக்கப்பட்ட தொகுப்பாளர்…. மிகுந்த அச்சத்திலிருக்கும் ஆப்கன் பெண்கள்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் 20 வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள் என்று தலிபான்களால் விரட்டியடிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அரசு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷப்னம் என்ற பெண் ஒருவர் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் ஊடகத்தில் இனி வேலை செய்யக்கூடாது என்ற புதிய விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்நிலையில் அரசு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஷப்னம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த தலிபான் ஒருவர் புதிய விதிமுறை நடைமுறையிலுள்ளதால் பெண்கள் இனி ஊடகத்தில் பணிபுரிய கூடாது என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி தொலைக்காட்சி தொகுப்பாளரான ஷப்னமை வீட்டிற்கு செல்லுமாறு திருப்பியும் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தொலைக்காட்சி தொகுப்பாளரான ஷப்னம் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் 20 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் அனைவரும் அடுத்த நிமிடம் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்திலுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |