கடந்த அதிமுக ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி கணக்கில் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பு உள்ளத்திற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன். இதற்கு கணக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்ட ஆய்வில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.85 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த ஆட்சியில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என கணக்கெடுத்தோம். இதைத்தான் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். எனக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியிலும் பயமில்லை. பேரவையில் பேச வாய்ப்பு அளித்தால் விளக்கம் தரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.