Categories
உலக செய்திகள்

‘அனைத்தையும் அழியுங்கள்’…. கால்பந்து அணியின் கேப்டன்…. வெளியான காணொளி பதிவு….!!

மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து கோபன்ஹேகனைச் சேர்ந்த    ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டனும், இணை நிறுவனருமான கலிடா போபால் கடந்த புதன்கிழமை அன்று காணொளி மூலமாக ராய்ட்டர்ஸிடம் பேசியுள்ளார்.  அதில் அவர் கூறியதாவது “கடந்த காலங்களில் பெண்களை தீவிரவாதிகள் துன்புறுத்தியும் கொலை செய்தும் வருகின்றனர்.

மேலும் அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகின்றனர். தற்பொழுது மீண்டும் தலீபான்களின் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் என்னவாகும் என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அவர் எப்பொழுதும் தனது அணியிடம் உறுதியாக இருங்கள். இன்னும் வலுவாக இருங்கள் என்று கூறி வருவாராம். ஆனால் தற்பொழுது அவரது அணியினரிடம் ” சமூகத்தில் தங்களது பொது அடையாளங்களை அழியுங்கள். உங்களது சீருடைகளை எரித்து விடுங்கள். சமூக வலைதளங்களில் இருந்து உங்களின் புகைப்படங்களை நீக்குங்கள். மேலும் தங்களின் பாதுகாப்பிற்காக விளையாட்டு பொருட்களை எரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து “ஒரு சமூக ஆர்வலராகவும், தேசிய மகளிர் கால்பந்து அணியை வழிநடத்திய கேப்டனாகவும் இதை கூறுவதில் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு தடவையும் என் நெஞ்சில் பேட்ஜ் அணிந்து விளையாடும் பொழுது எங்களின் நாட்டை தனித்துவமாக்கி காட்டுவதற்குகாக எவ்வாறு பாடுபட்டோம் என்பது எனக்கு நினைவு வருகிறது. ஆனால் இப்போது தலீபான்கள் எந்த நேரத்திலும் பெண்கள் இருக்கும் வீட்டின் கதவை தட்டுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் யாரும் வந்து உதவப் போவதில்லை. மேலும் ஒரு நாடு இவ்வாறு இடிந்து போவதை அனைவரும் வேடிக்கை பார்க்கிறோம் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |