கே.ஜி.எப்-2 படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
https://twitter.com/prashanth_neel/status/1428575016468238345
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கே.ஜி.எப்- 2 படத்தின் முக்கிய அப்டேட்டை பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.