நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சாதாரண பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் கோரிக்கையை ஏற்று சாதாரண பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். சாதாரண பயணிகள் ரயில்கள் இல்லாமல் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாதாரண பயணிகள் ரயிலை இயக்ககோரி ரயில்வே அமைச்சரை நானும் எம்.பி. கலாநிதி வீராசாமியும் சந்தித்தோம். விரைந்து சாதாரண பயணிகள் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Categories
பயணிகள் ரயில்களை இயக்க…. ரயில்வே வாரியம் நடவடிக்கை…. சு.வெங்கடேசன் எம்.பி…!!!!
