சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்பு கட்டடம் தரமற்ற முதல் கட்டப் பட்டதாக செய்தி வெளியான நிலையில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..
சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் கட்டி பல ஆண்டுகள் கட்டப்பட்டது போல் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.. இந்த கட்டிடத்தை தொட்டாலே உதிர்ந்து வருவதாக டிவி மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ததில் தொட்டாலே உதிர்ந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் 4ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது..
நேற்று இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் சட்ட பேரவையில் கொண்டு வரப்பட்டது.. சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு 2 சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்..