கோடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது தவறு இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் சட்ட சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. அரசியல் தலையீடு இருக்காது.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் யார் என்று வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது.. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீண்டும் விசாரணை நடத்துவது சட்டப்படி தவறானது.. என் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்த வழக்கு ஜோடிக்கின்றனர்.. எதிர்க்கட்சித் தலைவர் எனக்கே இந்த நிலை என்றால்.. சாதாரண மக்களின் நிலை என்ன?.. பொய் வழக்கு போட்டு எங்களை முடக்க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்தார்.. இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் இந்த வழக்கு தொடர்பாக மனு அளித்தனர்..
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் முதல்வர் பெயரை சேர்க்க முயற்சி நடைபெறுகிறது.. கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இதுதான் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை. கொரோனா 2வது அலையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டது இனிப்பு; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஒன்றிய அரசு பெயரில் ஆரம்பித்து நிறைய தேவையற்றதை பேசியது, பாஜக தொண்டர்களை கைது செய்ததுதான் கசப்பு, காரம் என்று விமர்சித்துள்ளார்.