Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுல வாழ பிடிக்கலையா… ஆப்கான் போங்க… பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!!

இந்தியாவுல வாழ பிடிக்கவில்லை என்றால் தாராளமாக ஆப்கானிஸ்தான் போகலாம் என்று  பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் சர்ச்சையாக பேசியுள்ளார்..

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகி விட்டது.. அந்நாட்டில் வாழ்வதற்கே மக்கள் அச்சம் கொள்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆட்சியின்போது அவர்கள் செய்த செயல் அப்படி.. அந்த நாட்டில் இருந்து வெளியேற அனைவரும் முயற்சி செய்கின்றனர்..

இந்த நிலையில் பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் அளித்த பேட்டியில், இந்தியாவில் வாழ அச்சப்படுவோர்  தாராளமாக ஆப்கானிஸ்தான் செல்லலாம்.. அங்கு பெட்ரோல், டீசல் விலை எல்லாம் குறைவு தான். ஆப்கான் சென்றால் தான் இந்தியாவின் அருமை புரியும் என்று பேசியுள்ளார்..

சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அமைச்சர் இப்படி பேசியிருப்பது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |