தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு வகையான நிதி உதவிகளும் உதவித் தொகையையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயில கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2021- 2022 ஆம் கல்வியாண்டில் ரூபாய் 15,000 வரை கல்வி உதவி கல்வி உதவி தொகை பெற முடியும். இதற்கு https://scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.11.2021 க்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.