பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 விழுக்காடாக வைத்திருக்கிறது. அதன் விளைவாக வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டி விதிக்கின்றன. இந்நிலையில் குறைந்த வட்டியை எந்த வங்கி/நிறுவனம் வழங்குகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். வங்கிகளைப் போலவே வீடமைப்பு நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டிக்கு வீட்டு கடன் வழங்கி வருகிறது. அதன்படி மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வீட்டுக் கடன் விகிதம் (ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு):
LIC Housing Finance : 6.66 – 7.60%
HDFC Ltd : 6.75 – 7.65%
Bajaj Finserv : 6.75 – 8.5%
Tata Capital : 6.9%
PNB Housing : 7.35 – 9.35%
GIC Housing Finance : 7.45%
Sundaram Home Finance : 7.85%
IndiaBulls Housing Finance : 8.65%
Aditya Birla Housing Finance : 9 – 12.5%
Piramal Capital & Housing Finance : 9.75%
Reliance Home Finance : 9.75 – 13%
Central Bank Housing : 10.10 – 11.15%