ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கினர். தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். எனவே ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார்.
Categories
ஆப்கான் சகோதரிகளை நினைத்து பயப்படுகிறேன்…. மலாலா யூசுப்சாய்….!!!!
