Categories
உலக செய்திகள்

‘மனிதாபிமான அடிப்படை’…. அடைக்கலம் கொடுத்துள்ள அமீரகம்…. தகவல் வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம்….!!

ஆப்கான் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறினார். மேலும் அவர் பணத்தை நிரப்பிக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அஷ்ரப் கனியின் விமானம் தஜகிஸ்தானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் அவர் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த மூன்று நாடுகளுமே தங்கள் நாட்டுக்கு வரவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இந்த நிலையில் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஓமனில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதில் “அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |