ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.