Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாயமான 17 வயது சிறுமி…. கூலி தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காலையில் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமி தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆனைமலை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான சதீஷ் குமார் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு, சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சதீஷ்குமார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |