நேற்று நடந்த சட்டமன்ற கூட்டதொடரில் அதிமுக கட்சியினர் வெளிநடப்பு செய்தநிலையில், இன்று காலை 11 மணிக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, எடப்பாடி பழனிச்சாமி கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தம்மையும் சிலரையும் சேர்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது எப்படி தேர்தல் வாக்குறுதியாக திமுக அளிக்க முடியும்? தேர்தல் அறிக்கைக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. ஊழல், வழக்கு பழிவாங்குதல் அடிப்படையில் திமுக அரசு நடந்து கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.