Categories
உலக செய்திகள்

47 பேர் உயிரிழந்த சோகம்…. அதிபயங்கரமாக நடைபெற்ற மோதல்…. தொடர் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகள்….!!

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே நடந்த மோதலில் மொத்தமாக 47 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக பர்கினா பசோ திகழ்கிறது. இந்த பர்கினோ பசோவிற்கு வடக்கே சாஹேல் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே அதி பயங்கரமாக மோதல் நடைபெற்றுள்ளது.

இந்த மோதலில் 14 ராணுவ வீரர்கள் உட்பட 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் பல அமைப்புகளினுடைய தீவிரவாதிகள் இந்த பர்கினோவில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு நடைபெறும் தாக்குதலில் பல நூறு மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள்.

Categories

Tech |