Categories
தேசிய செய்திகள்

“ஒருவேளை அதுவா இருக்குமோ”…? பயத்தில் தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆர்யா. இவரின் மனைவி குணா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை .இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருமலும், சளியும் தொடர்ந்து இருந்துவந்துள்ளது. இதனால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இந்த தகவலை மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவலை பார்த்த போலீசார் விரைந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பின்னர் அங்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |