மறைந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து முக்கிய சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எங்களை பயமுறுத்த பொய் வழக்கு போட்டு உள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர்களே தற்போது அரசு வழக்கறிஞர்களாக மாறி இந்த வழக்கை நடத்தி வருகிறார்கள்.
திமுக அரசு திட்டமிட்டே என்மீதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். அதிமுக இயக்கம் தொண்டர்களை காக்கும் இயக்கமாக இருக்கும். எங்களை முடக்க நினைப்பது எப்போதும் உங்களால் முடியாது. திமுக அரசு தேர்தலின்போது அறிவித்த அறிக்கைகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப இந்த பொய் வழக்கை கையில் எடுத்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.