சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து இருவரும் உறவினர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதனையறிந்த அந்த மாணவர் சிறுமியை அவளது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறுமி மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பரிசோதனையில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.