Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டியை நேரில் காண …. ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் …. பிசிசிஐ நம்பிக்கை ….!!!

14- வது ஐபிஎல் தொடரின்  மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .

14- வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 2-ம் தேதி போட்டிகள்  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில்  29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. எனவே மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொது செயலாளர் உஸ்மானி கூறுகையில், “பிசிசிஐ-யிடமும் ,ஐக்கிய அரபு அமீரகத்திடமும் இதுகுறித்து பேசுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறும்போது,” இந்திய கிரிக்கெட் வாரியம் ரசிகர்களின் கூட்டத்தை விரும்புகிறது .ஆனால் தற்போதுள்ள நிலையில் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதால்  இம்முறை ரசிகர்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் மேலும் புதிதாக 2 அணிகள் சேர்க்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் 60 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |