சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா, ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முனிஸ்காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Are you ready to play the game of #Dikkiloona?
Premiering on @ZEE5Tamil from the 10th of September ⏲️ Get ready for time travel, chaos and bayangara looty!@iamsanthanam @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin pic.twitter.com/HQamPti3Hi— KJR Studios (@kjr_studios) August 18, 2021
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் டிக்கிலோனா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஜீ 5 ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது.