Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனின் சாணி காயிதம்…. வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு…. வெளியான புகைப்படம்….!!!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சாணி காயிதம் எனும் திரைப்படம் உருவாக்கி வருகிறது. திரைப்படத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Categories

Tech |