ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படிப்பு, அரசியல், வேலைகள் என எந்த உரிமைகளையும் பெண்களிடமிருந்து பறிக்கக் கூடாது என்று தாலிபான்கள் எதிர்த்து பதாகைகளை ஏந்தி ஆப்கானில் தங்களது முதல் போராட்டத்தை இஸ்லாமிய பெண்கள் தொடங்கியுள்ளனர்.