பிரபல பாடகர் கானா பாலா ஒரு வக்கீல் என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கானா பாடலுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் தனது கானா பாடல்கள் மூலம் மக்களை மகிழ்வித்த கலைஞர் தான் கானா பாலா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றினேன். அப்போது நான் ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை சம்பாதித்தேன். அதனுடன் நான் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்தேன்.
அதில் ஒரு நிகழ்ச்சிக்கு 50 முதல் 80 ஆயிரம் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும் சினிமாவில் பாட்டு பாடுவதையும் தன் வக்கில் பணியையும் தன்னால் ஒரே நேரத்தில் செய்ய முடியாததால் அவர் தன் வழக்கறிஞர் பணியை விட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.