உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு கர்நாடக பெண் நீதிபதி நாகரத்தினா உள்ளிட்டோர் அடங்கிய 9 பெயர்களை உச்சநீதிமன்றத்தில் கொலிஜீயம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்எம் சுந்தரேஸ், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகரத்தினா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பேலா திரிவேதி ஆகிய 3 பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதன்படி 2025 ஆம் ஆண்டு பெண் நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.