செளசெள சட்னி
தேவையான பொருட்கள் :
செளசெள – 1 கப்
கொத்தமல்லித்தழை – 300 கிராம்
உளுந்து – 3 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் , நறுக்கிய செளசெள சேர்த்து வதக்கி மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். பின் புளியைச் சேர்த்து வதக்கி , காய் வெந்ததும் இறக்கி , கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்து தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான செளசெள சட்னி தயார் !!!