Categories
மாநில செய்திகள்

உங்களுக்கே இது நியாயமா…? மானியம் கொடுங்கள்…. ராமதாஸ் கோரிக்கை…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த மாதம் மேலும் 25 ரூபாய் அதிகரித்து 877 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு சமையல் எரிவாயுவுக்கு ரூபாய் 100 மானியம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும், ஆறு மாதங்கள் 23 சதவீதம் விலை உயர்த்தியது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய அவர் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |